தமிழில் ஆஷிக்கி பாடகர்!!!

 

“தும் ஹி ஹோ” என்ற பாடலை பாடி பலரின் மனதைக்  கொள்ளைக்கொண்ட பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் “அர்ஜித் சிங்” தற்போது தமிழிலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஜெய், சுரபி நடிக்கும் “புகழ்” படத்தில் ” நீயே வாழ்க்கை என்பேன், இனி வாழும் நாட்கள் எல்லாம்” என்ற பாடலை சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ரிகார்டிங் தியேட்டரில் தனது குரலை பதிவு செய்திருக்கிறார் அர்ஜித் சிங்.

மேலும் இதே படத்தில் “நாங்க தாண்டா, பொடியன் தாண்டா, ஆட்டம் தாண்டா, ஊருக்குள்ள கிங்குடா” என்ற பாடலை ‘அனிருத்’ சிங்கிளாக பாடியுள்ளார்.

“வடகறி” படத்தின் இசையமைப்பாளர் ‘விவேக் சிவா’ மற்றும் மெர்வின் சாலமன் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளனர்.