மறுபடியும் முதல்ல இருந்து ; வெங்கட் பிரபுவை தொடர்ந்து சிம்புதேவன்..!


சில இயக்குனர்களுக்கு முதல் படத்திலேயே ஓஹோவென புகழ் கிடைக்கும். அதை தொடர்ந்து அவர்களே எதிர்பாராத இடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்.. ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்புகளை அடுத்தடுத்து அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்களா என்றால் வெங்கட் பிரபுவையும் சிம்புதேவனையும் பார்க்கும்போது இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

வெங்கட் பிரபுவின் அதிர்ஷ்டம், நான்காவது படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.. அதை ஹிட்டாக்கியதால் அடுத்தடுத்து கிடைத்த கார்த்தி, சூர்யா பட வாய்ப்புகளை சொதப்பியதில், இதோ இப்போது பழைய சில்வண்டு நடிகர்களை வைத்து ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என மறுபடியும் முதல்ல இருந்து என்கிற நிலைக்கு வந்துவிட்டார்..

இவரிபோல இன்னொரு வெர்ஷன் தான் இயக்குனர் சிம்புதேவன்.. இவருக்கும் நான்காவது படமாக விஜய்யை வைத்து இயக்கும் ‘புலி’ வாய்ப்பு கிடைத்தது. வெங்கட் பிரபுவாவது அஜித்தை வைத்து ஹிட் கொடுத்துவிட்டு, அதன்பின்தான் தோல்விகளை தழுவினார். ஆனால் இன்றும் அஜித் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

ஆனால் சிம்புதேவனோ விஜய் படத்திலேயே சொதப்பி விஜய் ரசிகர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானார். இப்போ என்ன ஆச்சு..? தனது முதல் பட நாயகனான, தற்போது வீட்டில் அமர்ந்து ஈ ஓட்டிக்கொண்டு இருக்கும் வடிவேலுவுடன் சேர்ந்து ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். ஆக, இவரும் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சு… ஸ்ஸ்ஸ் ..அப்பா இப்பவே கண்ணை கட்டுதே..