விக்ரம் வயதை பார்த்து ஜகா வாங்கிய கீர்த்தி சுரேஷ்..!


விக்ரமுக்கு அப்படி என்ன வயதாகி விட்டது..? ஜஸ்ட் 50 வயதுதான்.. சில படங்களுக்காக கெட்டப்பை மாற்றி நடிப்பதற்காக மேக்கப் போட்டு போட்டு முகம் கொஞ்சம் வயதானது போல தோற்றம் தருகிறது.. அதற்காக விக்ரமை வயதானவர் என கூறி அவருக்கு ஜோடியாக நடிக வந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லிவிட்டாராமே நடிகை கீர்த்தி சுரேஷ்.. அவர் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என கொதிக்கிறார்களாம் விக்ரம் ரசிகர்கள்.

கருடா’ படத்தில் நடிக்க அழைத்தபோது தான் விக்ரமின் வயதை விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், அவருக்கும் தனக்கும் செட்டாகாது என வயதை காரணம் காட்டி ஒதுங்கி கொண்டாராம்.. அதன்பின்னர் தான் காஜல் அகர்வாலை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்களாம் படக்குழுவினர். காரணம் கேட்ட விக்ரமிடம் ஏதோ கூறி சமாளித்துள்ளார்களாம்.

நயன்தாரா ‘ஐயா’ படத்தில் அறிமுகமானபோது அவருக்கு வயது 20.. அவருக்கு ஜோடியாக நடித்த சரத்குமாருக்கு வயது 50.. அவரே நடித்துவிட்டார் இவருக்கு என்ன கசக்குது என குமுறுகிறார்கள் விக்ரம் படக்குழுவினர்.

இரண்டு வருடங்களுக்கு முன் 22 வயதான கீர்த்தி சுரேஷ், 46 வயதான திலீப்புக்கு ஜோடியாக நடித்தபோது தெரியாத வயதா, இப்போது விக்ரமை பார்த்ததும் தெரிகிறது.. அட கடவுளே படம் நிறைய கிடைக்குதுன்னு ஆடாதம்மா.. இந்த ஆட்டம் தாங்கதம்மா என சில நலம் விரும்பிகள் அவரை எச்சரித்துள்ளார்களாம்…