‘கிட்னா’….பேரே வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்காதீங்க…கிருஷ்ணா…அதாவது கிருட்டிணன்…இந்த பேரை ஊர் பக்கம்லாம் சுருக்கமா ‘கிட்னா’-ன்னு கூப்பிடுவாங்க. அக்ரஹாரம் பக்கமா இருந்தால் ‘கிச்சா’.
இந்த படத்தை இயக்கப் போறவரு சமுத்திரக்கனி. ‘நிமிர்ந்து நில்’ படத்துக்கப்புறமா அவரோட இயக்கத்துலயும் நடிப்புலயும் தயாராகப் போற படம் இது.
இந்த படத்துலதான் அமலா பால், வயசான ஒரு தோற்றத்துல நடிக்கப் போறாங்களாம். இரு வேடங்களில் அமலா பால் நடிக்க உள்ளார். சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ‘கிட்னா’ படம் பற்றி சமுத்திரக்கனி கூறியதாவது,
“நிமிர்ந்து நில்’ படத்தை தமிழ், தெலுங்குன்னு இரண்டு மொழிகள்ல பரபரப்பா இயக்கினதால ‘மைன்ட்டு’ ம் ரொம்ப பரபரப்பாகிடுச்சி. அதனால, காட்டுக்குள்ளயே போயிட்டு, மனித நேயத்தின் உச்சம் காட்டுக்குள்ளதான் இருக்குன்னு காட்டப் போறேன்.
நம்ம இந்தியாவுல கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கிராமங்கள்ளயும், காட்டுக்குள்ளயும்தான் வசிக்கிறாங்க. அவங்க ஏரியாவுல கொஞ்சம் ரிசர்ச் பண்ணி படம் பண்ணப் போறேன்.
அமலா பால் இந்த படத்துல டபுள் ஆக்ஷன்ல நடிக்கிறாங்க. 45 வயசு வரைக்கும் அவங்க டிராவல் பண்ற மாதிரி ஒரு கேரக்டர்.
எனக்கும் ஒரு ஐந்து விதமான மாற்றம் கொண்ட தோற்றம். 35, 45, 55, 65 வயசு கொண்ட தோற்றங்கள்ல நான் நடிக்கப் போறேன். 1970ல ஆரம்பிச்சி 2003ல முடியற மாதிரியான கதை.
அமலா பால் என்னோட மகளா நடிக்கிறாங்க. சீக்கிரமாவே படத்தை ஆரம்பிக்கிறோம், ” என தெரிவித்தார்.