வடிவேலு ஒரு படத்தில் இம்புட்டுக்காண்டி இருந்துக்கிட்டு என்னா வேலை பாத்துட்டான் பாருடா” என சொல்லுவார்.. அதுபோல ‘கொலைவெறி’ இசையமைப்பாளரின் வயது இப்போது 25க்குள் தான் என்றாலும் நான்கு வருடங்களுக்கு முன்னாடியே எம்மாம் பெரிய வேலையெல்லாம் பார்த்தார் என நெட்டில் பரவிய அவரது ‘உம்மா’ புகைப்படங்கள் கதைகதையாக சொல்லியது.
அது அனிருத் எண்ட்ரியான நேரம்.. ஆனால் இப்போது ஓரளவுக்கு ஹிட் பாடல்களை கொடுக்கிறார் என திரையுலகம் நம்புவதால் அவர் காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. அதனால் நம்ம ஆள் எந்நேரமும் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு சுற்றிவிட்டு லேட்டாகவே வீட்டுக்கு வருகிறாராம்.
இதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர் பையனுக்கு ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவான் என நினைத்து மகனிடம் இதுபற்றி பேசினார்களாம்.. ஆனால் இன்னும் நான்கைந்து வருடங்களுக்கு கல்யாண பேச்சையே எடுக்க கூடாது என இசை சொல்லிவிட்டதாம்.
இருந்தாலும் இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிட்டால் நன்றாக எப்படி என நினைத்த ஒல்லி இசையின் பெற்றோர், சரி.. சொல்வார் சொன்னால் கேட்டுத்தானே ஆகவேண்டும் என அவருக்கு மாமா முறையாகும் சூப்பர்ஸ்டாரிடம் போய் நீங்களாவது அவனுக்கு எடுத்து சொல்லுங்களேன் என வேண்டுகோள் வைத்தார்களாம்.
ஆனால் இதையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்ட சூப்பர் ஸ்டார், “சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.. நான் சொல்லி கேட்டுகொண்டால் ஒகே.. ஆனால் மறுத்துவிட்டால் அது அவ்வளவு நன்றாக இருக்காது.. இந்தக்காலத்து பையன்கள், நாம சொன்னா ஏத்துக்கிற லெவலை எல்லாம் தாண்டிட்டாங்க.. விடுங்க.. அவங்களே உங்ககிட்ட வந்து நேரடியா சொல்ற காலம் வரும்.. அப்பா பாத்துக்கலாம்” என சொல்லி கும்பிட்டு அனுப்பி வைத்தாராம்.