நட்பாகவே இருக்க முயற்சித்தாலும் அதில் விரிசல் ஏற்படுத்துவது காலத்தின் விளையாட்டு போல.. ஆர்யா, நயன்தாராவை வைத்து கிளம்பிய கிசுகிசுக்களை புத்தகமாக வெளியிட்டால் இரண்டு தொகுதிகள் போடவேண்டி இருக்கும். எதுக்கு வீண் வம்பு.. உன் வீட்டு பிரியாணியும் வேணாம்.. உன் சங்காத்தமும் வேணாம் என நட்பின் அளவை சுருக்கிக்கொண்டார்.
அதன் ஒரு கட்டமாகத்தான், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என அந்த டீம் முயற்சி எடுத்தபோது ஆர்யாவும், சந்தானமும் ஓகே சொல்ல, இல்ல.. நான் நடிக்கல.. என கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட்டாராம் நயன்தாரா. சம்பளம் வேண்டுமானால் அதிகமாக தருகிறோம் என சொல்லப்பட, சம்பளம் எனக்கு ஒரு பிரச்சனையில்லை என விளக்கமும் சொல்லிவிட்டார்.
மதராச பட்டணம் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என் ஏ.எல்.விஜய்யும் ஆர்யாவும் கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டு வருகிறார்களாம்.. இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யலாம் என ஆர்யாவிடம் கூறினாராம் ஏ.எல்.விஜய்..
ஆனால் ஏற்கனவே சூடுபட்ட அனுபவமோ, அல்லது பதிலடி கொடுக்கும் முயற்சியாகவோ நம்ம படத்துக்கு நயன்தாரா வேணாம் என்று சொல்லிவிட்டாராம். இவர்களுக்குள் நடக்கும் டக் ஆப் வார் பற்றி தெரியாத விஜய், ரெண்டு பெரும் பிரண்ட்ஸ் தானே.. அப்புறம் எதுக்கு நயன்தாரா வேணாம்னு சொல்றார்னு குழம்பிட்டு இருக்காராம்.