ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக டார்லிங்-2’ படம் ஏப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கலையரசன் நடித்துள்ள இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றபோது, அதில் பேசிய ஞானவேல்ராஜா, திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது தான் வருடத்திற்கு குறைந்தது ஐந்து படங்களாவது ரிலீஸ் பண்ணுதால் விதவிதமான பி.ஆர்.ஓக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருப்பதாகவும் அவர்களில் ஒருசிலர் பத்திரிகையாளர்களுக்கும் தனக்குமான இடைவெளியை அதிகப்படுத்திவிடுவதாகவும் கூறினார்.
அதனால் இனிமேல் தனது படத்தை பற்றியோ அல்லது தன்னைப்பற்றியோ வரும் எந்த செய்திகளுக்கும் தன்னிடமே விளக்கம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என கூறிய ஞானவேல் ராஜா மேடையிலேயே தனது செல் நம்பரையும் அறிவித்தார்..
சமீபகாலமாக சில பி.ஆர்.ஓக்கள் பத்திரிகையாளர்களை சினிமாக்காரர்களுடன் நேரிடையாக நெருங்க விட மாட்டேன் என்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்ததால் தான் இந்தவிதமாக ரூட்டை மாற்றியுள்ளார் ஞானவேல்ராஜா.. நல்ல பாலிசி தான்.