கமல் கட்சி ஆரம்பித்த சூட்டோடு பிரச்சனைகளும் குடைபிடித்து வர தொடங்கிவிட்டன. ஆனால் அரசியல் கட்சிகளில் இருந்து ஏதிர்ப்பு வந்தால் பரவாயில்லை. அவருக்கு பல வருடமான நட்பில் இருந்த கௌதமியிடம் இருந்தே குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதுதான் ஆச்சர்யம் அளிக்கிறது.. அதிலும் பண விவகாரம் என்பதுதான் இதில் ஹைலைட்..
தமிழ் சினிமாவில் ஜோடிகளாக நடித்து பின்னர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக வாழ்ந்தவர்கள் கமல்-கௌதமி. 13 வருடங்களாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2016-ம் ஆண்டு தனித்தனியாக பிரிந்தது. இதனையடுத்து இருவரும் தனித்தனியாக பிரிந்தே வாழ்ந்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கௌதமி, தசாவதாரம், விஸ்வரூபம் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி எனக்கு, இன்னும் சம்பளம் வழங்கவில்லை எனவும் புகார் கூறினார்.
மேலும் சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்தாலே போதும். ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
தசாவதாரம், விஸ்வரூபம் படங்கள் எல்லாம் எப்போதோ வெளியானவை.. அந்தப்படங்களை தயாரித்த நிறுவனங்கள் எல்லாம் மிகப்பெரிய நிறுவனங்கள்.. சம்பள ஒப்பந்தம் போடாமல் யாரையும் புக் பண்ண மாட்டார்கள். கமலும் ஓசியில் வேலைபார்க்க சொல்லி கூறியிருக்க மாட்டார்.
அப்டியே சம்பள பாக்கி இருந்தாலும் அவற்றை அப்போதே கேட்டு வாங்கியிருக்க முடியும். அப்படி இல்லாவிட்டாலும், கமலிடம் இருந்து பிரிய முடிவேடத்த சமயத்திலோ, அல்லது பிரிந்த பின்னரோ அந்த சம்பள பாக்கியை பெற்றுக்கொண்டிருக்க முடியும்.
ஆனால் கமல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்துள்ள இந்த சமயத்தில் கௌதமி இப்படி சின்னத்தனமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதில் உள்நோக்கம் உள்ளதாகவே நடுநிலையாளர்கள் பலரும் கூறுகின்றனர்.
குறிப்பாக கௌதமி பா.ஜ.க ஆதரவாளராக மாறியபின், கமலை எந்தவிதமாக கேவலப்படுத்த முடியுமோ, அதையெல்லாம் செய்யவேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய அசைன்மென்ட்டே. அதைத்தான் தற்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளாராம் கௌதமி.