உப்புமா பட ரேஞ்சுக்கு டைட்டில் வைத்த அதர்வா..!


ஒரு பக்கம் நடிகராக நடித்துக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் கிக் ஆஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஒரு படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் அதர்வா.. பாணா காத்தாடி மூலம் அதர்வாவை அறிமுகப்படுத்திய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்திலும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘செம போத ஆகாத’ என தலைப்பு வெளியிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் அதர்வா.

படத்தின் டைட்டில் என்னவோ குடிக்காதீர்கள் என்கிற கருத்தை சொல்வது போல தோன்றினாலும், அதில் ‘செம போத’ என்கிற வார்த்தையை கோட்டை எழுத்தில் பெரிதாக போட்டு ‘ஆகாத’ என்கிற வார்த்தையை சிறிதாக போட்டிருப்பது கூட குடியை ஆதரிக்கும் ஒருவித வழிமுறையாகத்தான் தெரிகிறது.. அதுசரி முதன்முறையாக தயாரிக்கும் படத்துக்கு இப்படியா உப்புமா பட ரேஞ்சுக்கு டைட்டில் வைப்பார் அதர்வா..?