கடைசி நேர பஞ்சாயத்தில் சிக்கிய அரவிந்த்சாமி படம் ; இந்தவார(மு)ம் ரிலீஸ் இல்லை..!


இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படம் முதலில் ஜனவரி ரிலீஸ் என சொல்லப்பட்டு பின்னர் மார்ச் மத ரிலீசாக முடிவானது.

ஆனால், பின்னர் ஸ்ட்ரைக் காரணமாக ஏப்ரல்-27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் வெளியானதால் இந்தப்படத்திற்கு திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாக மே-11ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு மீண்டும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்தநிலையில் .மே-11ஆம் தேதி அதாவது நாளையும் இந்தப்படம் ரிலீசாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை வெளியிடும் பரதன் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன் வினையோக்சதர், மற்றும் தியேட்டர்காரர்களிடம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிக்கியுள்ளதால், இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் உண்டானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒருவாரம் கழித்து இந்தப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.