ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய்யின் 62வது படம் ஆரம்பமாகும் முன் இந்த படத்தின் பிக்பாஸ் ஜூலி நடிக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. இப்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது. ஆம்.. பிக்பாஸ் ஜூலி முக்கியமான கேரக்டர் ஒன்றில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறாராம்.
இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால், படகுழுவிற்கு நெருங்கிய, நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வர வாய்ப்பில்லை. படத்தில் நடிக்கும் ஜூலியே வாயை திறந்து கூறினால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.