‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் லைம் லைட்டுக்கு வந்தாரே தவிர, அந்தப்படம் வெளியானபின் சுமார் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார் அசால்ட் சேது நடிகர். ஆனால் எந்தப்படமும் ஓடவில்லை… பேருதான் பெத்த பேரு என்பதுபோல, அசால்ட் அண்ணன் ஹீரோவாக நடித்தாலும் கூட இன்னும் சில படங்கள் பிசினஸ் ஆகாமல் இருக்கின்றன..
இதில் ஒல்லிக்குச்சி காமெடி நடிகர் தயாரித்த ‘பாம்பு சட்டை’ படத்தில் அசால்ட் சேதுதான் ஹீரோ.. பர்ஸ்ட் காபி அடிப்படையில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களிடம் காசு வாங்கி இன்னொருமுறை சதுரங்க வேட்டை ஆட நினைத்தார் ஒல்லிக்குச்சி நடிகர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனங்களுக்குள் சண்டை ஏற்பட படம் பாதியிலேயே நின்றது.. ஒருவழியாக தனது கைக்காசை போட்டு படத்தை முடிக்க நினைத்தார் ஒல்லிக்குச்சி.. ஆனால் அசால்ட் சேதுவோ தனக்கு இன்னும் அதிக சம்பளம் வேண்டுமென கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஒல்லிக்குச்சி என்ன சொன்னார் தெரியுமா..?
“தம்பி.. இந்த ரெண்டு வருஷத்துல வெளியான ஒங்க படம் ஒண்ணுகூட ஓடலை.. இதையும் விட்டா ஊருக்கு போற கடைசி பஸ்ஸ விட்டமாதிரித்தான். அதனால அலும்பு பண்ணாம நடிச்சுட்டு போங்க தம்பி.. மீறி வில்லங்கம் பண்ணா, நான் மூணு சங்கத்துலயும் மெம்பரா இருக்கேன் தம்பி.. அப்புறம் உங்களுக்குத்தான் சிக்கல் ஜாஸ்தி ஆகிடும்’னு கூலா சொன்னாராம்.. அதன்பின் அசால்ட் வாலாட்டாமல் நடித்துக்கொடுத்தாராம்.