சமீபத்தில் வெளியான பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தை பார்த்தவர்களுக்கு அதில் தென்பட்ட பல ஆச்சர்யங்களில் ஒன்றுதான் முன்னாள் நடிகையும் தற்போதைய டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் டான்ஸராக ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தது. இந்தப்படத்தில் சாவு ஊர்வலத்தில் நடனமாடும் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்திருந்தார் காயத்ரி.
இந்தப்படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய அணுகியபோது பாலாவின் படமாச்சே என ஆர்வமுடன் தான் கமிட்டானாராம்.. அதற்கேற்ற மாதிரி அவரை வைத்து சில காட்சிகளை படமாக்கிய பாலா, அதன்பின் தான் சாவு ஊர்வலத்தில் டான்ஸ் ஆடுவது போன்ற பாடல் காட்சியையும் படமாக்கினாராம். ஆனால் படம் வெளியானபோது பார்த்தால் அந்த சவ ஊர்வல டான்ஸ் மட்டும் இருந்ததால் என்னைப்போய் இப்படி சவ ஊர்வலத்தில் டான்ஸ் ஆடவச்சிட்டாங்களே என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் அந்த நடன மங்கை.