கானா பாடல்களை சினிமாவில் பாப்புலர் ஆக்கியவர் இசையமைப்பாளர் தேவா.
அவரது எல்லா படங்களிலும் ஒரு கானா பாடல் நிச்சயம் என்பது ஊர் அறிந்த விஷயம், அதிலும் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளி வந்த அனைத்து படங்களிலும் தேவாவின் கானா பாடல்கள் பிரசித்தம். தற்போது மான் கராத்தே படத்தில் தேவா பாடி இருக்கும் “ஓபன் தி டாஸ்மாக்” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பாப்புலராகி விட்டதால் அவருக்கு பாட்டு பாட ஏகத்துக்கும் அழைப்பு வருகிறதாம்.
எந்த இசையமைப்பாளர் அழைத்தாலும் பாட்டு பாட நான் ரெடி என்கிறார் தேவா.
கானாவை கேட்க நீங்க ரெடிதானே?