சில படங்கள் படத்தின் டைட்டிலையும் அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலையும் பார்த்தாலே அது எந்த வகையை சேர்ந்தது என கணித்து விடலாம். ஒரு சில படங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக நம் கணிப்பையும் மீறி கவனம் ஈர்க்கும். அந்தவகையில் சாருஹாசன் மிகப்பெரிய தாதாவாக நடிக்கும் தாதா 87 என்கிற படம் தடபுடலாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு அதில் சாருஹாசன் பெரிய அளவில் ஒன்றும் சாதிக்கவில்லை என்பது ஏமாற்றமே தந்தது. ஆனாலும் படம் பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இடைவேளைக்குப்பின் படத்தின் கதை வேறு ஒரு ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தது.. குறிப்பாக கதாநாயகியாக நடித்திருந்த ஸ்ரீ பல்லவி இந்த படத்தை திருநங்கையாக நடித்தது மிகச்சிறந்த பாராட்டுகளை பெற்றுள்ளார்
சொல்லப்போனால் படத்தின் இரண்டாம் பாதி தான் முக்கிய கதையே. இதையே அழகாக முழுமையாக படமாக எடுத்து இருந்தால் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படமாக இது மாறி இருக்கும். இந்த படத்தை பற்றிய மவுத் டாக் பரவுவதற்கு முன்பாகவே தியேட்டர்களிலிருந்து படம் தூக்கப்பட்டுவிட்டது.. ஆனாலும் நல்ல படம் என்கிற பெயர் பரவியதால் விரைவில் இந்தப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம் படக்குழுவினர்.