சம்மர் ரிலீசை கைப்பற்றிய ராகவா லாரன்ஸ்


ராகவா லாரன்ஸ் நடிக்கும் மற்ற படங்களைவிட, அவரே இயக்கி நடிக்கும் ஹாரர் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். முனி என்கிற பெயரில் வெளியான முதல் பாகத்தை தொடர்ந்து காஞ்சனா-1 காஞ்சனா-2 என அடுத்தடுத்த பாகங்கள் வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தன.

இந்த நிலையில் இந்த படத்தில் நான்காம் பாகம் ‘முனி-4 காஞ்சனா-3’ என்கிற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் வசூலை சிந்தாமல் சிதறாமல் அள்ளவேண்டும் என்பதற்காக தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாதம் 19ம் தேதி இந்தப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. தேர்வுகள் மற்றும் எலெக்சன் எல்லாம் முடிந்து மாணவர்களும் பொதுமக்களும் விடுமுறைக்கு தயாராகும் நேரத்தில் சரியாக படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.