பொதுவாக மக்களை அதிரவைக்கும் ஒரு நிகழ்வு நடந்தால் மக்கள் அதிலிருந்து எப்போது வெளியே வருவார்கள் தெரியுமா..? அடுத்ததாக இன்னொரு அதிர்ச்சியான செய்தி வெளியானதும் முந்திய விஷயத்தை சுத்தமாக மறந்துவிடுவார்கள்.. விஜய் அஜித் விஷயத்திலும் இதுதான் தொடர்ந்து நடந்துவருகிறது..
இன்று விஜய் நடித்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு சில தினங்கள் முன்பிருந்தே இந்த பேச்சு மீடியாவில் ஓடிக்கொண்டு இருந்தது.. ஆனால் இன்று திடீரென அஜித் மேனேஜர் மூலமாக ஒரு அறிக்கை வெளியாகி அது பரபப்பான செய்தியாக மாறி, விஜய்யின் ‘மெர்சல்’ பட பரபரப்பை சற்றே குறைத்தது.
இந்த அறிக்கை மூலம் அஜித் நல்ல ஒரு விஷயத்தைத்தான் சொல்ல வந்துள்ளார் என்றாலும், இதை சில தினங்களுக்கு முன்போ, அல்லது அடுத்த வரம் தனது படமன ‘விவேகம்’ ரிலீசாகும் நேரத்திலோ சொல்லியிருக்கலாமே.. அதைவிடுத்து விஜய் பங்கசன் நடக்கும் நேரத்தில் இப்படி வெடி கொளுத்திப்போட வேண்டிய அவசியம் என்ன என பொங்குகிறார்கள் விஜய் ரசிகர்கள்.