ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் திருமணம் செய்த ஸ்ரேயா, நீண்ட வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு சில தினங்களுக்கு முன் இந்தியா திரும்பினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயா, விரைவில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
மேலும், என்னைத்தேடி பட வாய்ப்புகள் வருகிறது. என்றாலும் பல படங்களை நான் கதை பிடிக்காமல் நிராகரித்து விடுகிறேன். எல்லா படங்களிலுமே ஆணாதிக்கமே அதிகமாக உள்ளது. நடிகைகளின் கேரக்டர் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளது. அப்படி கொடுக்கப்படும் கேரக்டரும் படம் பார்க்கும் போது இன்னும் மாறிவிடுகிறது. தமிழை விட தெலுங்கில் எனக்கு அழுத்தமான வேடங்கள் கிடைத்துள்ளன என்கிறார்.
சினிமாவை பொறுத்தவரை கல்யாண நடிகைகளுக்கு என்ன நிலை என்பது கண்கூடாகவே தெரியும் ஒன்று. அதில் ஓரிருவர் விதிவிலக்கு.. ஸ்ரேயாவை பொறுத்தவரை அவரை திருமணத்திற்கு முன்பே ரசிகர்களும் திரையுலகமும் ஓரங்கட்டி விட்டனர்.. அப்படி இருக்கையில் இப்போது அஜித்துக்கும் விஜய்க்கும் ஜோடியாக நடிக்கவா கூப்பிடுவார்கள்..? அம்மா, அக்கா கேரக்டர்கள் தான் தேடிவரும்..
இப்போது ஆணாதிக்க சினிமா என்று கூறும் ஸ்ரேயாவுக்கு, ரஜினி, விஜய், தனுஷ் ஜோடியாக நடித்த காலத்தில் எல்லாம் அந்த விஷயம் தெரியவில்லையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.