சமீபத்தில் வெளியான ‘சௌகார்பேட்டை’ படம் பேய்ப்படம் தான் என்றாலும் அதில் வில்லனாக நடித்திருந்த சுமனை விட அவரது கேரக்டர் பெயர் தான் சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியது.. படத்தில் அவரது பெயர் கோத்ரா சேட்.. சௌகார்பேட்டையை சேர்ந்த அவர் சினிமா நடிகைகளுக்கு கூட வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும், வட்டி கட்ட முடியாத நடிகையை படுக்கைக்கு அழைப்பதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தமிழ் சினிமா பீல்டில் ரொம்பவே பாப்புலரான முகுந்த்சந்த் போத்ரா என்பவரைத்தான் படத்தின் இயக்குனர் வடிவுடையான் மறைமுகமாக அட்டாக் பண்ணியிருப்பதாக புரடக்சன் சைடில் பேசிக்கொள்கிறார்கள்.. அவரது அடாவடி வட்டி பிசினசால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இயக்குனர் வடிவுடையான் கூட தனது முந்திய படங்களில் அவரால் சிக்கலுக்கு ஆளானதாகவும் அதனால் தான் இந்தப்படத்தில் அவர் பெயரை வைத்து ஒரு காட்டு காட்டிவிட்டதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.