நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. ஆனால் இவர் இந்தப்படத்தின் கதையை ஒரு இந்திப்படத்தில் இருந்து லைட்டாக உருவி இருப்பதாக சொல்லப்படுகிறது..
ரைட்ஸ் வாங்காமல் காப்பியடிப்பது சம்பந்தப்பட்ட பாலிவுட் கம்பெனிக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்.. ஆனால் அதே கதையை தமிழில் பண்ணுவதற்காக இன்னொரு பிரபல நடிகர் அதன் ரைட்ஸை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறாராம்…
விக்னேஷ் சிவன் செய்த காரியம் அவர் கவனத்துக்கும் போனதாம். ஆனால் இப்போதே பிரச்சனையை எழுப்பினால் உஷாராகி விடுவார்கள் என்பதால் படத்தை முடித்து ரிலீஷுக்கு கொண்டுவரட்டும் அப்போது ‘வச்சு செய்யலாம்’ என்கிற முடிவில் இருக்கிறாராம் அந்த பிரபல நடிகர்.