50வது படம்தான்.. அதுக்காக இவ்வளவு பில்டப் கூடாது சாமி..!


விஜய் நடித்து அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படம் என்பதால் இந்தப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் கடும் சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார். சந்தோசம்.. ஹீரோவானபின்னும் கூட இசையமைக்கிறாரே..?

ஆனால் இந்தப்படத்தின் பாடல்கள் பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, விஜய் நடித்த ‘கில்லி’ படத்திற்கு பிறகு ‘தெறி’ படத்தின் பாடல்கள்தான் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகப் போகிறது என்று சொல்லி வருகிறாராம்.. அதையும்விட இதில் இடம்பெற்றுள்ள ‘ஜித்து ஜில்லாடி’ என்ற பாடல் விஜய்யின் அறிமுக பாடல்களிலேயே முதலாவதாக இருக்கும் என்றும் அள்ளிவிட்டு வருகிறாராம்..

அப்படியானால் வேட்டைக்காரன் பட பாடல்களை இவர் கேட்டதே இல்லையா..? ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ என்கிற ரஹ்மானின் ஒப்பனிங் பாடலை மறந்துவிட்டாரா..? ‘போக்கிரி பொங்கல்’ என்று ஒரு பாடல் வந்தது ஞாபகம் இருக்கிறதா..? இல்லையா..? ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடல் குழந்தைகளின் ரைம்ஸ் ஆக மாறிய சங்கதியெல்லாம் இவருக்கு தெரியவே தெரியாதா..?

இவர் நல்ல இசையமைப்பாளர் தான் இல்லையென்று சொல்லவில்லை.. இந்தப்படத்தில் இவர் பாடல்கள் ஹிட்டாக கூட ஆகட்டும்.. ஆனால் வெளிவந்தபின்பு ரசிகர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் எது சூப்பர் என்று. அதற்குள் இவ்வளவு பந்தா எதற்கு என்கிறார்கள் நடுநிலை இசை ரசிகர்கள். உண்மைதானே..?