‘கெத்து’ தமிழ் வார்த்தை தான் ; வரிவிலக்கு குழுவின் உள்நோக்கம் அம்பலம்.!


‘வச்சார்ல நீதிபதி ஆப்பு’ என உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் உதயநிதியின் ரசிகர்களாகிய உடன் பிறப்புகள்.. பின்னே தமிழகராதியை புரட்டி பார்த்து பார்த்து ‘கெத்து’ என்னும் தமிழ்ப்பெயரை, உதயநிதி தனது படத்துக்கு சூட்டினால், வரிவிலக்கு குழுவினரோ கண்ணை மூடிக்கொண்டு அது தமிழ் வார்த்தை இல்லை என ஒரே போடாக போட்டு வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டார்கள் இல்லையா..?

சும்மா விடமாட்டேன் பார் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் உதயநிதி.. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தைதானே.. முருகனை பற்றிய பாடலிலேயே ‘கெத்து’ என வருகிறதே… அப்புறம் ஏன் வரிவிலக்கு மறுக்கப்பட்டது.. இது குறித்து தமிழக அரசு விளக்கம் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்..

இது போதாதா உடன் பிறப்புகள் துள்ளிக்குதிக்க..? இதன்மூலம் உதயநிதியின் படங்களுக்கு தொடர்ந்து வரிவிலக்கு மறுக்கப்படுவதில் உள்நோக்கம் இருப்பது புலனாகிறது என்று அடுத்த வழக்குக்கு திரி கிள்ள யோசனை செய்துவருகிறார்களாம் ரசிகர்களாகிய உடன்பிறப்புகள்..