பிரியா ஆனந்த்.. ஆவரேஜ் அழகுடன் எந்தவித நடிப்பு திறமையும் இல்லாமல் ஒரு நடிகையால் சினிமாவில் இரண்டு வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என நிரூபித்தவர்.. அப்பா செத்து போயிட்டாருன்னு சொன்னாலும், நாளைக்கு உன்ன பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்னாலும், சாம்பார்ல உப்பு இல்லேன்னு சொன்னாலும் அவரது ரியாக்சன் ஒரே மாதிரித்தான் இருக்கும்.
அவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக அடிவாங்க ராசியில்லாத நடிகைகள் பட்டியலில் கார்த்திகாவுக்கு போட்டியாக இடம்பிடித்தார்… ஆனால் இவருடன் நடித்த ராசி, கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கையும் வீட்டிலேயே மோட்டுவளையை பார்த்துக்கொண்டு அமரவைத்து விட்டது.
அப்படியே பீல்டு அவுட் ஆகி வெளியே கிளம்பும் நேரம் பார்த்து, தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக இவரை நடிக்க வைக்க ராஜேஷை தாஜா பண்ணி இவருக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.. கொடுமைடா சாமி என்கிறது கோலிவுட் வட்டாரம்.