“ஆகஸ்ட் சினிமா” கேரளாவில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை நடிகர் ப்ரித்விராஜ் நடத்தி வருகிறார்.
இவருடன் இணைந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இயக்குனர் ஷாஜி நடேசனும் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் “உறுமி”. இந்த திரைபடத்தில் ப்ரித்விராஜ் மற்றும் ஆர்யா நடித்திருந்தனர்.இவர்களின் நட்பு கேமராவுக்கு அப்பால் பட்டது. இந்த நட்பின் அடையாளமாக ப்ரித்விராஜ் ஆர்யாவை தனது ஆகஸ்ட் சினிமா நிறுவனத்தின் உரிமையாளராக நியமித்தார்.
இதற்கிடையில் ஆர்யா சென்னையில் “ஷோ பீப்பிள்” என்ற பெயரில் ஓர் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தற்போது இந்த நிறுவனம் “வாசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க” என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை M.ராஜேஷ் இயக்குகிறார்.
ஆர்யாவுக்கு 2015-ல் பம்பர் லாட்டரி அடித்திருக்கிறது.