தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கென ஒரு ரசிகர் வட்டம் உண்டு. ஆனால் அவரது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் கதை திரட்டு சர்ச்சையில் சிக்குவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக விஜய்யை வைத்து அவர் இயக்கிய கத்தி படத்தின் கதை, தன்னுடையது என்று எழுத்தாளர் மிஞ்சுர் கோபி வழக்குப் பதிவு செய்திருந்தார். ஆனால் இதனை மறுத்த முருகதாஸ், நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளரும், துணை இயக்குநருமான வருண் ராஜேந்திரன், ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், சர்கார் படத்தின் கதை, தனது செங்கோல் படத்தின் கதையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு, இந்தக் கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். முன்னதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இக்கதையை கூறியுள்ளேன். அதற்கு கண்டிப்பாக விஜய் நல்ல செய்தி கூறுவார் என்று உறுதியளித்தார். ஆனால் தற்போது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில், எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் நடத்திய விசாரணையில் 9௦ சதவீத கதை செங்கோல் கதையில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாம். வருண் ராஜேந்திரன் இந்த கதையை 2௦௦7லிலேயே முறைபடி பதிந்துவைத்து விட்டாராம். ஆனால் அதன்பின் அவர் பல இடங்களில் இந்த கதையை சொல்லி வந்தாராம்.. அப்படி ஏ.ஆர்.முருகதாசுக்கு நெருங்கிய போட்டோகிராபரிடம் இதை சொல்ல அவர் மூலமாக முழுக்கதையும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு தெரிந்துபோனது என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் உஷாராக இந்த கதையை ‘பச்சை’ என்கிற பெயரில் எழுதி சிறந்து வருடங்களுக்கு முன் தனது பெயரில் பதிந்து வைத்துக்கொண்டாராம். விசாரணையின்போது அதை காட்டி தப்பித்துக்கொள்ளலாம் என கணக்கு போட்டிருந்தாராம். ஆனால் வருண் ராஜேந்திரன் 2௦௦7லிலேயே கதையை பதிந்த ஆதாரம் வலுவாக இருக்க, இந்த விவகாரம் தெரியாமல் வந்த ஏ.ஆர்.முருகதாஸ் மாட்டிக்கொண்டாராம். இப்போதும் பஞ்சாயத்து நடந்து வருவதாக கேள்வி.