நடிகர் கார்த்திக் குமாரை தெரியும் தானே..? ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவை தனுஷிடம் பறிகொடுப்பாரே அவரே தான். இரண்டு நாட்களுக்கு முன் நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.. இத்தனைக்கும் மாதவன் அறிமுகமான அதே ‘அலைபாயுதே’ படத்தில் மணிரத்னம் என்கிற மோதிரக்கையால் குட்டுப்பட்டு அறிமுகமானவர் தான்..
ஆனால் தனக்கான அங்கீகாரத்தை இந்த தமிழ்சினிமா தரவில்லை என்றும், 19 படங்களில் நடித்துள்ளேன் அந்த திருப்தியே போதும் என்றும் கூறியுள்ளார்.. யார் பின்னாலும் அலைந்து திரிந்து சான்ஸ் கேட்கும் எண்ணம் தனக்கு எப்போதும் இல்லை என்றும், தானே தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டதால் தான் சினிமாவில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ள அவர், இதுதான், தன்னுடைய நடிப்பு என்கிற கடையை நிரந்தரமாக மூடுவதற்கான நேரம் என வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்.