அரசாங்க உத்தரவை சாமர்த்தியமாக விளம்பரமாக்கிய கடைக்குட்டி சிங்கம்..!


சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.

இதன் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி ஒரு செய்தியை கடைக்குட்டி சிங்கம் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்..

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் லாரி ஸ்ட்ரைக் நடந்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக அரசாங்கம் அரசு பேருந்துகளில் காய்கறிகளை இலவசமாக ஏற்ற சொல்லி உத்தரவு போட்டிருக்கிறது. லாரி ஸ்ட்ரைக் முடிந்ததும் மீண்டும் பழைய குருடி கதவை திரட்டி என்கிற கதையாக அரசு பாஸ்ட் ஓட்டுனரும் கண்டக்டரும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளத்தான் போகிறார்கள்..

எது எப்படியோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அரசாங்க உத்தரவை தங்களுக்கான பப்ளிசிட்டியாக பயன்படுத்திக்கொண்டார்கள் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர்.