பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. சமீபகாலமாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் குணமான நிலையில் இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரது சிகிச்சைக்குப் பணமின்றி தவிப்பதாக கன்னட திரையுலகில் இருக்கும் சக நிலையில் நடிகர் நடிகைகளிடம் கோரிக்கை வைத்தாராம் விஜயலட்சுமி.
அவர்களும் ஓரளவு உதவி செய்தனர்.. ஆனால் அப்படி உதவி செய்த ரவி பிரகாஷ் என்பவர் மீது தன்னிடம் அத்துமீற முயன்றதாக ஒரு குற்றச்சாட்டையும் கூறி அதிர வைத்தார் விஜயலட்சுமி. அது மட்டுமல்ல கன்னடத்தில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் ஒரு வீடியோ மூலம் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, “விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவிசெய்து கொண்டே இருக்க முடியாது.. ஒருவர் சொல்வது எல்லாம் உண்மையா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.. உடலில் குறையுள்ள மனிதர்களே உழைத்து வாழும்போது, கைகால் நன்றாக இருக்கும் நபர்கள் என் தங்களை கவனித்துக் கொள்ள முடிவதில்லை” என கூறி விஜயலட்சுமிக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார் சிவராஜ்குமார்.