இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன், விஜய் இணைவதாக சில நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின்படி கார்த்திக் சுப்புராஜின் கதைக்களத்தில் தன்னால் ‘இறங்கி’ வேலைபார்ப்பது கடினம் என உணர்ந்த விஜய் தனக்கு ஏற்ற, தனது ரசிகர்களுக்கு ஏற்ற இட்லி சாம்பாரை மட்டுமுமே சாப்பிடுவது என்றும் பிடிக்காத பீட்சாவை தின்று சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இன்னொரு பக்கம் அஜித்தையும் தேடிப்போய் கார்த்திக் சுப்புராஜ் கதை சொன்னதாகவும் தெரிகிறது.. ஆனால் சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன் போன்றவர்கள் தயாரிக்கும் லெமன் ஜூசை குடித்தே பழக்கப்பட்ட தனக்கு, கார்த்திக் சுப்புராஜ் மாதிரியான ஆட்கள் தயாரித்து தரும் ஜிகர்தண்டா செட்டாகாது என கும்பிடு போட்டு அனுப்பிவிட்டாராம். இன்னும் வேதாளம் மாதிரி எத்தனை படங்கள் கொடுத்தாலும் பார்ப்பதற்கு தனது ரசிகர்கள் தயாராக இருப்பதால் அந்த ரூட்டிலேயே போக முடிவெடுத்துள்ளாராம் அஜித்.