மழைவிட்டாலும் தூவானம் விடாதது போல கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற படத்தை எடுத்தாலும் எடுத்தார் இன்னும் அது சம்பந்தப்பட்ட பிரச்சனை கருப்புவை, விடாது கருப்பு ரேஞ்சில் விடாமல் துரத்திக்கொண்டே வருகிறது. போர்வெல் படத்தை தயாரித்தது கஞ்சா கருப்புதான் என்றாலும் அந்தப்படத்தில் கிட்டத்தட்ட அவர் வொர்க்கிங் பாட்னர் மாதிரித்தான்.
அதாவது அவரது சம்பளத்தை அப்படியே முதலீடாக போட்டுவிட்ட மாதிரித்தான். ஒருவழியாக படத்தை முடித்து ரிலீஸ் பண்ணும் நேரத்தில் பத்துலட்ச ரூபாய் செட்டில்மென்ட் ஒன்றில் கஞ்சா கருப்புவை, செக் ஒன்றை கொடுக்கவைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் படத்தின் இயக்குனர் கோபி.
கஞ்சா கருப்பு கொடுத்த செக் ரிட்டர்ன் வந்துவிட டென்ஷனான பைனான்சியர், கஞ்சா கருப்பு நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே பணத்தை கேட்டு வந்துவிடுகிறாராம். இங்கேதான் வருகிறார் என்றால், தற்போது மலையாளத்தில் முதன்முறையாக, அதுவும் மோகன்லாலோடு இணைந்து ‘லோகம்’ படத்தில் நடித்து வரும் கஞ்சா கருப்புவை தேடி கேரளாவுக்கும் போய்விட்டாராம் சம்பந்தப்பட்டவர்.