மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடுபவர் தான் நடிகை பார்வதி. நடிகைகள் ஏன் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டும் என கூறி, தனது பெயரின் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த ‘மேனனை’ தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்டவர் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘கசபா’ படத்தை சமீபத்தில் தான் பார்த்துள்ளார்.
அந்தப்படத்தை பார்த்துவிட்டு அந்தப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு, இந்திய சினிமாவில் உள்ள நல்ல நடிகர்களில் ஒருவரான மம்முட்டி இப்படி பேசியதுதான் வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார் பார்வதி.
அதற்கு மம்முட்டி ரசிகர்கள், அவர் மரியான் படத்தில் கிளாமராக நடித்தது, தனுஷுடன் முத்தக்காட்சியில் நடித்தது ஆகியவற்றை குறிப்பிட்டு, நீங்கள் சினிமாவில் இதையெல்லாம் என்ன காரணத்திற்காக செய்தீர்களோ, அதே காரணம் தான் மம்முட்டிக்கும் என பார்வதிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.