விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஆடை பட இயக்குனர் ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் விஜய் கருப்பு நிற கோர்ட் சூட்டில் மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.