ரேஷன் கார்டுல பேர் சேர்க்கவேண்டியதுதான் பாக்கியாமே..!

சமீபத்தில் ஒன்பதாம் நம்பர் நடிகை வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்ததில் வருமான வரி குளறுபடிகள் மட்டும் வெளிச்சத்துக்கு வரவில்லை.. அம்மணியின் அந்தரங்க ரகசியமும் சேர்ந்து அம்பலத்துக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன ரகசியம் என்று கேட்கிறீர்களா.?

அம்மணி தற்போது நடித்து முடித்துள்ள ‘தாதா’ படத்தின் இயக்குனரான பிள்ளையார் சிவன் இயக்குனரை காதலிக்கிறார்.. அவருடன் நெருக்கமாக இருக்கிறார், வெளிநாடுகளுக்கு டூர் எல்லாம் போய் வந்துவிட்டார் என அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் இதை இரண்டு தரப்பினருமே இதுவரை மறுக்கவில்லை.

சமீபத்தில் நடிகை வீட்டில் நடந்த ரெய்டின் போது ஆவணங்களை சரி பார்த்த அதிகாரிகள், மேற்படி நடிகையின் சில சொத்துக்கள் பிள்ளையார் சிவன் இயக்குனர் பேரில் மாற்றி எழுதப்பட்டிருந்தது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை அவர் என் கணவர் தான் நானும் அவரும் திருமணம் செய்துகொண்டோம் என சொல்லி அதிர்ச்சி அளித்தாராம்.

ஆக, நடிகையின் குடும்ப ரேஷன் கார்டில் மணாளனின் பெயரை சேர்க்ககவேண்டியது மட்டும் தான் இனி பாக்கி போல தெரிகிறது..