மலையாளத்தில் நயன்தாரா நடித்த புதிய நியமம் படம் வெளியாகி இரண்டு வாருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் தமிழ், தெலுங்கில் பிசியாகிவிட்ட்ட நயன்தாரா கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இருந்தாலும் தற்போது நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் ‘லவ் ஆக்சன் ட்ராமா’ மற்றும் ‘கோட்டயம் குர்பானா’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதில் லவ் ஆக்சன் ட்ராமா படத்தை பிரபல மலையாள நடிகர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் என்பவர் இயக்குகிறார்.. ஐவரும் ஒரு நடிகர் என்றாலும் டைரக்சன் துறைக்கு இவர் புதியவர் தான். ஆனாலும் இவர் வி.ஐ.பி குடும்பத்து வாரிசு என்பதால் இவரிடம் போனிலேயே கதை கேட்க சம்மதித்தார் நயன்தாரா. அதிலும் ‘3௦ நிமிடம் தான் நேரம் ஒதுக்க முடியும். அதற்குள் இந்த கதை எனக்கு பிடித்துவிட்டால் ஒகே.. இல்லாவிட்டால் என்மீது வருத்தப்படாதீர்கள்’ என சற்று கறாராகவே கூறினாராம்.
ஆனால் தயன் சீனிவாசன் கதைசொல்ல ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே தான் நடிப்பதற்கு ஒகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அதன்பின் மீதி இருபது நிமிடங்களும் கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம் நயன்தாரா. நயன்தாரா தான் நடிக்கவேண்டும் என முதல் சாய்ஸாக கூறிய ஹீரோ நிவின்பாலிக்கும், இணை தயாரிப்பாளர் அஜூ வர்கீசுக்கும் அப்போதுதான் போன உயிர் திரும்பி வந்ததாம்.