அப்பன் செத்ததுக்கே வாராதவன் அன்னதானத்துக்கா வரப்போறான் என கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள்.. அதேபோலத்தான் பெரிய பெரிய ஹீரோக்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத நயன்தாரா நேற்று திருநாள் பட இசைவெளியீட்டு விழாவிற்கும் வழக்கம்போல டிமிக்கி கொடுத்தார்…
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை தொடர்ந்து ஐந்து வருடம் கழித்து அதன் இயக்குனர் பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ள படம் தான் இந்த திருநாள்… ஜீவா, நயன்தாரா இருவரும் ஒன்பது வருடத்திற்கு பிறகு இணைந்து நடித்துள்ளார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் ஸ்பெஷல்.. கும்பகோணம் பின்னணியில் ரவுடியிசம் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளதாம்.