அது என்னவோ தெரியவில்லை.. சோஷியல் மீடியாவில் ஸ்ருதிஹாசன் எது செய்தாலும் ஓட்டு ஒட்டென ஓட்டுகிறார்கள் ட்ரோல் மன்னர்கள்.. தெலுங்கில் ‘மலர் டீச்சர்’ வேடம் போட்டதற்காக போன வருஷம் பூராவும் மலர் டீச்சர் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.. அந்த அலுப்பே இன்னும் தீர்ந்திருக்காது..
இப்போது வெறும் வாயை மென்று கொண்டிருந்த ட்ரோல் மன்னர்களுக்கு ‘சங்கமித்ரா’ மூலம் ஸ்ருதிஹாசன் மீண்டும் அவல் தந்திருக்கிறார். இன்று சோஷியல் மீஎடியாவில் வளம் வந்தபோதுதான் அந்தப்படத்தில் நடிக்கும் ஸ்ருதியை இப்படியெல்லாம் கூட கலாய்ப்பார்களா என்கிற ரேஞ்சில் போட்டு தாக்கியிருக்கின்றார்கள்.. அதில் சாம்பிளுக்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்.
சங்கமித்ரா படத்தின் கதை என்ன என்பதற்கு சங்கமித்ரா 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை என படக்குழு விளக்கம் அளித்துள்ளது..
இந்த விளக்கத்தை வைத்து ஸ்ருதியை கிண்டல் செய்யும் விதமாக, “ஈடற்ற அழகியா..? மூணு ஹீரோ பேரை மட்டும் தான் சொல்றானுங்களே ஒழிய ஹீஎரோயின் யாருன்னு சொல்ல மாட்டேங்கிறாங்களே.. யாரா இருக்கும் அந்த ஈடு இணையற்ற பேரழகி என ஸ்ருதிஹாசனையும் ஆண்கள் பட்டியலில் சேர்த்து கொஞ்சம் ஓவராக வே கிண்டலடித்துள்ளார்கள்.
இன்னும் சிலர் ஸ்ருதி மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் சினிமா இண்டஸ்ட்ரியைவே புரட்டிப் போட்டிருப்பார். ஸ்ரீதேவி டூ நயந்தாரா காணாமல் போயிருப்பார்கள். ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு என இன்னும் ஒரு படி மேலாக போய் கலாய்த்துள்ளார்கள்..
ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தானே..?