மாஸ்டர் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மேலும் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் விடுமுறை வருவதால் படத்தை ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட், லுக் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தற்போது மாஸ்டர் படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தன்று வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரை பின்பற்றி அனைத்து விழாக்களிலும் ஒரு குட்டி கதை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது படத்தின் சிங்கிள் ட்ராக் “ஒரு குட்டி கதை” என்ற பெயரிலேயே வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.