அட கொடுமையே..! ஆக்சன் கிங் அர்ஜுனுக்கா இந்த நிலை வரவேண்டும்..?


ஆக்சன் கிங் அர்ஜுன் படங்கள் என்றாலே ஆறு பைட் நிச்சயம் என ஒரு காலத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. அவரது படத்திற்கு வரும் ரசிகர்களும் சண்டைக்காட்சிகளுக்காகவே தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் இப்போது ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கிவரும் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் சண்டைக்காட்சிகளில் இவர் நடிக்கவில்லையாம்

என்ன..? சண்டை காட்சிகள் இல்லாத அர்ஜுன் படமா.? அட கொடுமையே..! ஆக்சன் கிங் அர்ஜுனுக்கா இந்த நிலை வரவேண்டும்..? அவர் படத்தில் சண்டைகாட்சிகளை மட்டும் தானே ரசிக்க முடியும் என ஜெர்க் ஆகும் ரசிகர்களுக்கு ரெடிமேட் பதில் ஒன்றை வைத்துள்ளார் ஆக்சன் கிங்.

“ஒரு மெல்லிய கோடு’ படத்திற்காக காக்கிசட்டை போடாத ஒரு காவலனாக நடித்திருக்கிறேன். போலீஸ் ஆபீசர் என்றாலே நிச்சயமாக அடிதடி இருக்கும், ஆக்சன் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இந்த படத்தில் படத்தின் திரைக்கதையே ஆக்சன் படம் மாதிரி ஒரு வேகத்தை கொடுக்கும். அதனால்தான் சண்டைக் காட்சிகளில் நடிக்கவில்லை” என கூறியுள்ளார் அர்ஜுன்.