அடாடா.. இந்த ஆடியோ ரிலீஸ் பங்ஷன்ல ஒவ்வொரு படக்குழுவினரும் பண்ற பப்ளிசிட்டி அட்ராசிடி இருக்கே, அது படத்துக்கு படம் வித்தியாசப்படும். அப்படித்தான் இன்னைக்கு நடந்த, அட்டகத்தி தினேஷ் நடிச்ச ‘ஒருநாள் கூத்து’ திரைப்பட ஆடியோ ரிலீஸ்லேயும் புதுமையா பண்றோம்னு ஒரு விஷயம் பண்ணுனாங்க..
வழக்கமா சில பட நிறுவனங்கள் தங்களோட படத்தின் பெயர் போட்ட டீ சர்ட்ட படக்குழுவினருக்கு கொடுத்து போட்டுக்கச்சொல்லி அங்கங்க சுத்து விடுவாங்க.. ஆனா இந்தப்படத்துல படத்தோட தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ உட்பட கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல, பட்டு வேட்டி, சிவப்புகலர் ‘ராமராஜன்’ சட்டை (ராம்ராஜ் சர்ட் இல்லைங்க) உடுத்திட்டு வந்தாங்க.. எங்க பார்த்தாலும் ஒரே சிவ(ப்பு) மயம் தான்.
இந்த ‘ஒருநாள் கூத்து’க்கு இவ்வளவு செலவு தேவையான்னு ஒரு பக்கம் கேள்வி வந்தாலும், பப்ளிசிட்டி, வித்தியாசம் காட்டுறதுன்னு எதையாவது பண்ணித்தானே ஆகணும்னு சொல்றாங்க படக்குழுவினர்.. ஒவ்வொருத்தர் பார்வையிலும் ‘திருமணம்’ங்கிறது அவங்களை எப்படி மாத்திருக்குன்னு ஒரு அஞ்சு நிமிட முன்னோட்டம் போட்டாங்க.. படத்தோட கதையும் இந்த கான்செப்ட்ட பேஸ் பண்ணித்தான் அமைஞ்சிருக்காம்.
கதாநாயகிகளாக மியா ஜார்ஜ், துபாய் அழகி நிவேதா மற்றும் மெட்ராஸ்’ ரித்விகா நடிக்க, முக்கிய வேடங்களில் கருணாகரன், ரமேஷ் திலக், பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் என்பவர்தான் படத்தை இயக்கியிருக்கார்.