சரத்குமார் அணியின் தோல்விக்காக நேர்மையாக பாடுபட்ட ராதிகா..!

இதென்னடா புது வம்பா இருக்கு.. அந்தம்மா எதுக்கு அவங்க வீட்டுக்காரர் அணியோட தோல்விக்காக பாடுபடப்போகிறார்.. சும்மா புருடா விடாதீங்க என நீங்கள் நினைக்கலாம். வெற்றிக்காக நூறு சதவீதம் பாடுபடுவதைப்போல தோல்விக்காகவும் நூறு சதவீதம் நேர்மையாக பாடுபடக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள்.. அதில் தான் ராதாரவியை பின்னுக்கு தள்ளிவிட்டு ராதிகா முன்னிலை வகிக்கிறார்.

பொதுவாக தேர்தலில் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் தான் வெற்றியை தீர்மானிக்கின்றன. சரத்குமார் தரப்பினருக்கு நாடக நடிகர்கள் ஆதரவு இருந்தது என்றால், விஷால் அணிக்கு இளம் நடிகர்கள் ஆதரவு இருந்தது.. ஆனால் இதில் எந்த் சீனுக்குள்ளும் உள்ளே வராத நடுநிலை நடிகர்கள், மூத்த நடிகர்கள் பலரும், இந்தப்பிரச்சனையை குறிப்பாக இரு அணிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்கள்.

விஷால் அணியினரை பொறுத்தவரை அவர்கள் எங்கு பேசினாலும் அதில் தனி நபர் தாக்குதல் என்பது குறைவாகவே இருந்தது.. சொல்லப்போனால் அதை அவர்கள் விரும்பவும் இல்லை.. சரத்குமார் செய்த ஒப்பந்தத்தில் முறைகேடு இருக்கிறது என்கிற பொதுவான குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து பேசினார்கள்..

ஆனால் சரத்குமார் அணியில் ஒருபக்கம் ராதாரவி வண்டிவண்டியாக வார்த்தைகளை அள்ளிவிட, இன்னொரு பக்கம் நானும் துணைக்கு வருகிறேன் அண்ணா என ராதிகாவும் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கினார். அவர் சீரியலில் கம்பீர டயலாக் பேசுவது போலவே நிஜத்திலும் நினைத்துக்கொண்டும் தான் எதோ மேதாவி என நினைத்துக்கொண்டும் எதிரணியில் உள்ள விஷாலை, கார்த்தியை, நாசரை என பலரையும் மட்டம் தட்டி பேச ஆரம்பித்தார்..

விஷாலை ரெட்டி’ என சாதிப்பெயர் சொல்லி ராதிகா அழைத்ததும் தான் நடுநிலை வாக்காளர்கள் உஷாரானார்கள்.. எங்கே நாளைக்கு இவர் நம்மையும் சேட்டு என்றோ, செட்டியார் என்றோ ஜாதிப்பெயரை சொல்லி அழைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என நினைத்த அவர்கள் ராதிகாவின் பேச்சை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை..

அதுமட்டுமல்ல, “கார்த்தி.. நீ விஷால் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு இருக்க.. தைரியமிருந்தா முன்னாடி வா” என பஞ்ச் டயலாக் பேசியதுடன் அதற்கு கைதட்டவும் ஆட்களை தயாராக வைத்துக்கொண்டார். கூடவே சிம்பு அநாகரிகமாக பேசியதற்கெல்லாம் சபாஷ் போட்டு ‘நீ தமிழண்டா’ என உசுப்பேற்றியதை தமிழர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் இந்த தேர்தலில் கண்கூடாக தெரிந்துள்ளது.

குறிப்பாக சின்னத்திரையில் அவரது அடாவடியால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலரும் அவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதால், அவருக்கு சரியான பாடம் புகட்ட இந்த தேர்தலை பயன்படுத்திக்கொண்டார்கள். பிரஸ்மீட் வைப்பது என்பது தங்கள் தரப்பு நியாயங்களை சொல்வதற்குத்தாதானே தவிர,. மற்றவர்களை வசைபாடுவதற்கு அல்ல.. அந்த வகையில் தர்மம் ஜெயிக்கவேண்டும் என்பதற்காகவே நூறு சதவீதம் நேர்மையாக பணியாற்றி தனது அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார் ராதிகா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.