பொதுவாக கிளாமரில் இறங்கி அடிக்கும் நம் தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை அணிவதற்கு மட்டும் லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.. அதற்கென தனியாக கூடுதல் பேமண்ட் தருகிறோம் என சொன்னாலும் நீண்ட யோசனைக்குப்பின் ஒரு சில நடிகைகளே ஒப்புக்கொள்வார்கள்..
ஆனால் சமீபத்தில் ஒரு கானா மியூசிக் மொபைல் ஆப்ஸ் விளம்பர ஷூட்டிங் ஒன்றுக்காக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்திருக்கிறார் நடிகை பியா.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த விளம்பர படத்தில் அவர் பிகினி உடை அணிந்து நடித்துள்ளதுதான். கேட்டால் பிகினி அணிவதற்கான ஸ்பெஷல் உடலமைப்பு எதுவும் தேவையில்லை என்கிறார் பியா.
இவருக்கும் பிகினி அணிவதில் பெரிய ஆர்வம் இல்லையாம்.. ஆனால் அந்த விளம்பர படத்தின் கான்செப்ட் அந்தமாதிரி இருந்ததால் ஒப்புக்கொண்டாராம்.. வெளிநாட்டில் தான் படப்பிடிப்பு என்றாலும் பிகினி அணிந்து நடிக்க சற்று கூச்சமாகத்தான் இருந்ததாம் பியாவுக்கு. ஆனால் அங்கே கடற்கரைக்கு வந்த வெளி நாட்டவர்களில் பலரும் முக்கால் நிர்வாணம், முழு நிர்வாணத்துடன் தரிசனம் தந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பியாவுக்கு, நாம் பண்ணுவதெல்லாம் ஜுஜூபி மேட்டர் என்று தோணவே, பிகினி அணிவதில் அவரது கூச்சம் போய்விட்டதாம்.