“மணிமண்டபம் கட்டவேண்டியது சிவாஜிக்குத்தான் ; தமிழ் சினிமாவுக்கு அல்ல” ; விஷால்


தமிழ்சினிமாவில் கேளிக்கை வரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.. மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில அரசுகள் கேளிக்கை வரி பிரச்சனையை சுமூகமாக கையாண்டு வருகின்றன. ஆனால் சினிமாவில் இருந்து முதல்வர்களை பெற்ற தமிழகம் மட்டும் இப்போது வரிப்பிரச்சனையால் சிக்கி தவிப்பதை விதி என்றுதான் சொல்லவேண்டும்..

இதன் காரணமாக கடந்த வாரம் ரிலீசாகவேண்டிய படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தை ஆரம்பித்தது தயாரிப்பாளர் சங்கம்.. இந்த நேரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, தியேட்டர்காரர்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என அறிவித்த தமிழக அரசு, கேளிக்கை வரி குறைப்பு பற்றி மூச்சு கூட விடவில்லை.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற நடிகர்சங்க பொதுக்குழுவில் பேசிய விஷால் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக பேச்சில் ஆவேசம் காட்டினார். “சிவாஜிக்குத்தான் நாங்கள் மணிமண்டபம் கட்டச்சொன்னோம்.. தயவுசெய்து தமிழ்சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்” என காட்டமாக பேசினார்.