ப்ரியாமணிக்கு கடந்த ஐந்து வருடங்களாகவே தமிழ்சினிமாவில் படவாய்ப்புகள் இல்லை தான். இடையில் வந்த சாருலதா கூட கன்னட மொழியில் இருந்து இங்கு வந்ததுதான். கடந்த வருடமாவது கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு என மொத்தம் மூன்று படங்கள் அவர் நடித்து ரிலீசாகின. இப்போது தமிழ் தவிர மற்ற மொழிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் ப்ரியாமணியை மலையாள சேனல் ஒன்றில் ‘டி ஃபார் டான்ஸ்’ என்கிற ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜ் பதவி வகிக்க வாய்ப்பு தேடிவர அதை மறுக்கும் நிலையில் அப்போது ப்ரியாமணி இல்லை. அதனால் அதிலும் கலந்துகொண்டு சீரியல் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் எல்லாம் பண்ணினார்.
இந்த நிலையில் மிஸ்கினின் உதவியாளர் ஒருவர் தான் இயக்கவிருக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டக்ருக்கு பிரியாமணியை பிக்ஸ் செய்ய விரும்பியுள்ளார். எப்படியோ ப்ரியாமணியின் நம்பரை வாங்கி போன் பண்ணியபோது, எதிர்முனையில் ப்ரியாமணியின் அம்மாதான் போனை எடுத்தாராம்.
அவரிடம் விபரம் சொல்ல, அந்தம்மாவோ, கொஞ்சநாள் செலக்டிவ் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டவர்போல, தனது மகள் இன்னும் பீக்கில் இருக்கிறார் என்கிற நினைப்பிலேயே இரண்டு பேருக்கு பிளைட் டிக்கெட், ஸ்டார் ஹோட்டல் வசதி, பெட்ரோல், பேட்டா, கன்வேயன்ஸ் என அடுக்கியதோடு, இன்றைய முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு சம்பளத்தையும் கேட்டாராம்.
போன பண்ணிய இயக்குனருக்கு தான் பிரியாமணி வீட்டிற்கு போன் செய்தோமா, இல்லை அனுஷ்கா, நயன்தாராவுக்கு போன் செய்துவிட்டோமா என்கிற சந்தேகமே வந்துவிட்டதாம். இந்த விஷயத்தை மம்மி தனது மகளிடம் பெருமையுடன் சொல்ல, ப்ரியாமணிக்கு பிட்ஸ் வராத குறைதானாம்.
நானே வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என அல்லாடிக்கொண்டு இருக்கிறேன்.. இதுல நீ வேற கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே என மம்மியின் வாய்க்கு பெரிய பூட்டாக போட்டுவிட்டாராம். இனி இந்த மாதிரி மம்மியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றுதான், தற்போது திருமணம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளாராம் பிரியாமணி.