டி.பி.கஜேந்திரனை ஒரு காமெடி நடிகராக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி பட ஒப்பனிங் சீனையே ஆரம்பித்து வைப்பாரே அவர்தான். அதையும் தாண்டி 24 படங்களை இயக்கிய இயக்குனர். அத்தனையும் சின்ன பட்ஜெட் படங்கள் தான்.. அப்படிப்பட்டவர் ஒரு விழா மேடையில் மனம் நொந்து தயாரிப்பளார் சங்கத்தை போட்டு தாக்கியிருக்கிறார்.
‘பார்க்கலாம் பழகலாம்’ என வழக்கம்போல ஒரு உப்புமா கோடம்பாக்கத்தில் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு ஒரு ஆடியோ ரிலீசும் நடத்த, அதில் கலந்துகொள்ள வந்திருந்தார் இயக்குனர் டி.பி.கஜேந்திரன். வந்தவர், தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கம் சுயநலத்துடன் செயல்படுகிறது. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளார்களை கண்டுகொள்வது இல்லை.. இதேநிலை நீடித்தால் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கென தனியாக ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டியது தான் என ஒரு குண்டை தூக்கிபோட்டுவிட்டு சென்றுள்ளார்..