புலி’ படத்தில் ஸ்ரீதேவிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்ட விவகாரம் பல விஷயங்களை கிளறி வெளியே கொண்டுவந்துள்ளது. படம் வெளியான ஆரம்ப நாட்களில் அவ்வளவு கலெக்சன், பட்டையை கிளப்பும் வசூல், நூறு கோடி கிளப் என்றெல்லாம் தயாரிப்பாளர் தரப்பில் அள்ளிவிடப்பட்டது. ஆனால் இப்போது ஸ்ரீதேவியின் சம்பள பாக்கி விவகாரத்தால் அதெல்லாம் வெறுமனே கப்சா என்பது தெளிவாகிவிட்டது.
தற்பொழுது ‘புலி’ தயாரிப்பாளர்களான பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு வருமானவரித்துறையினரால் நெருக்கடியில் உள்ளோம் எனக்கூறியுள்ளனர். இன்னொரு பக்கம், புதியதாக இரண்டு படங்களை தயாரித்து வருகின்றாராம் ‘புலி’ தயாரிப்பாளர்களில் ஒருவரான செல்வகுமார்.. நட்டத்தில் இருப்பதாக சொல்லும் இவரால் எப்படி இரண்டு படங்களை தயாரிக்க முடிகிறது என்கிற கேள்வி ஸ்ரீதேவிக்கும், வருமான வரித்துரையினருக்கும் எழுந்தால் மீண்டும் சிக்கல் தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.