தற்போது ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். மீண்டும் என்றால்… அப்படியென்றால் ஏற்கனவே முடிந்துவிட்டதா..? என்கிற உங்கள் சந்தேகம் புரிகிறது. ராஜமவுலியின் ‘மகதீரா’, ‘நான் ஈ’ படங்களுக்கு கிராபிக்ஸ் பண்ணியவர் தான் இந்தப்படத்திற்கும் கிராபிக்ஸ் வேலைகளை கவனித்து வருகிறார்…
‘புலி’ படத்தின் ரிலீஸ் தேதியை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஆறு நாடுகளில் பிரித்து அனுப்பி வேலைகளை துரிதப்படுத்தினார்கள். சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகளை முடித்து தளபதிக்கு படத்தை போட்டுக்காட்டினார்களாம். ஆனால் நிறைய காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் தளபதிக்கு திருப்தி தரவில்லையாம்.
ஏற்கனவே வெளியூர் நடிகரும் இயக்குனரும் உள்ளூரில் வந்து மாஸ் காட்டி மிரட்டிவிட்டு போயிருக்கின்றனர்.. நாம் அதை மிஞ்சவில்லை என்றாலும், அதற்கு சமமாகவாவது இருக்கவேண்டும் என தனது திருப்தியை வெளிப்படுத்தினாராம். அதனால் மீண்டும் கிராபிக்சில் படத்தை மெருகேற்றும் வேலைகள் துரிதமாக ஆரம்பித்துவிட்டதாம்.