விஜய் நடித்துள்ள பேண்டசி படமாக உருவாகியுள்ள ‘புலி’ நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இயக்குனர் சிம்புதேவன் அந்த ஏரியாவில் இறங்கி விளையாடுபவர் என்பவர் நமக்கு தெரியும்.. ரைட்.. ஆனால் விஜய்க்கு இந்த மாற்றம் செட்டாகுமா என்றால் இதற்கு முந்தைய நிகழ்வுகளை பார்க்கும்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது…
சில வருடங்களுக்கு முன் அதிரடி படங்களாக நடித்துவந்த விஜய் திடீரென, அதிலிருந்து விலகி ‘சச்சின்’ என்கிற லவ் ஸ்டோரியில் நடித்தார் அல்லவா..? ஆனால் விஜய்யின் அதிரடி படங்களை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு அந்தப்படம் எதிர்பார்த்த தீனி போடாததால் படம் அட்டார் பிளாப் ஆனது. ஓரளவு அந்தப்படம் தப்பித்தது என்று சொன்னால் அது வடிவேலு காமெடியால் தான். அதாவது விஜய்யிடம் வேறு எந்த மாற்றங்களையும் ரசிகர்கள் விரும்பவில்லை என்பதைத்தான் அந்தப்படம் சொல்லாமல் சொன்னது.
துப்பாக்கி, கத்தி என தற்போது தொடர்ந்து பீட் ஆக்க்ஷன் படங்களாக நடித்துவரும் விஜய், சரித்திரப்படத்தில் நடிப்பது அவருக்கு வேண்டுமானால் சேஞ்ச் ஓவராக இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள், ஏன் விஜய் படங்களை விரும்பி பார்க்கும் குழந்தைகளை கூட அது திருப்திப்படுத்தாது என்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே ஓரளவு கணித்துவிட முடிகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் ‘கிழட்டு ராணி’யாக நடித்துள்ள ஸ்ரீதேவியை எல்லோரும் ஆஹா ஓஹோவென புகழ்கிறார்கள்.. ஆனால் அவர் தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக இருப்பார் என்பது படம் வெளியான பின்னர்தான் தெரியப்போகிறது.. ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும்.
ஏற்கனவே இதற்கு முன் வெளியான சிம்புதேவனின் படங்கள் வரிசையாக அடிவாங்கியவைதான்.. அவரது பேண்டசி ‘கணக்கு’கள் எல்லாம் விஜய் மூலமாக ‘புலி’ படத்தில் ஒர்க் அவுட் ஆகும் என அவர் நம்பியிருப்பதை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இந்தப்ப் ‘புலி’ 16 அடி பாயும் என்பதை விட படம் பார்க்க வருபவர்களை பிராண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.