விரதத்தை கைவிட்ட சந்தானம்…!


பொதுவாக கதாநாயகர்களில் அஜித்தும் முன்னணி கதாநாயகிகளில் நயன்தாராவும் தான் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில், அது தங்களது பட விழாவாக இருந்தால் கூட கலந்துகொள்ள மாட்டார்கள்.. அந்தவகையில் காமெடியன்களில் சந்தானம் ஒன்றிரண்டு விழாக்களில் கலந்துகொண்டாலும் பெரும்பாலான விழாக்கள், ஏன், தனது பட விழாக்களுக்கு கூட வருவது இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இப்போது கதாநாயகனாக வேறு ஆகிவிட்டார்.. இனி கேட்கவும் வேண்டுமோ என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்க, தனது விரதத்தை சமீபத்தில் மயில்சாமிக்காக கலைத்துவிட்டார் சந்தானம். ஆம்.. மயில்சாமியின் மகன் கதாநாயகனாக நடித்துள்ள ‘என்று’ தணியும் பட இசைவெளியீட்டு விழாவில் நட்புக்காக கலந்துகொண்டு, மயில்சாமியை கௌரவப்படுத்தி, மகிழ்ச்சியடைய வைத்தார் சந்தானம்..

சந்தானம் மட்டுமல்ல, தான் அறிமுகமான ‘ஜெயம்’ படத்தில் மயில்சாமி நடித்திருந்த காரணத்தினால் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஜெயம் ரவியும் இந்த விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம் தான்…