திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதிப் பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் சமீபத்தில்நடந்தது. மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நடிகர் சத்யராஜும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள். ஏன் நானே 3 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று அவர்களை ஒருபோதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வியெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும்” என திருவாய் மலர்ந்துள்ளார்.
இவரது பேச்சில் இருந்து தெரிய வரும் சில விஷயங்களை சோஷியல் மீடியா விமர்சகர்கள் பலர் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளனர்.
இவர் தனது தானை தலைவனாக நினைக்கும் எம்.ஜி.ஆரையே கேவலப்படுத்தியுள்ளார்.
சக நடிகர்களுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு கண்டு வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்.
நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வியெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசியுங்கள் என கூறியிருக்கிறாரே, அப்படியானால் நடிகர் அல்லாதோர் இன்று ஆட்சி செய்கிறார்களே, அதில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்கிறாரோ இவர்..?
ஒரு நடிகனாக தனக்கு எல்லாம் தெரியவில்லை என்கிற அறிவு குறைபாடு காரணமாக மற்றவர்களும் அப்படித்தான் இருப்பார்களோ என இவராக குருட்டாம்போக்கில் நினைத்துக்கொண்டுள்ளார்.