மானம் கெட்டு அஜித்தை நாடும் இயக்குனர்கள்..!


மீனம்பாக்கம் வழியாக பஸ்ஸில் போகும்போது உள்ளே நிற்கிற விமானங்களை எல்லாம் அழகாக பார்த்துவிட்டு போக முடியும்.. ஆனால் கொட்டிவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டு வழியாக டபுள்டக்கர் பஸ்ஸில் போனால் கூட உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மிகப்பெரிய கோட்டைச்சுவரை எழுப்பி வைத்திருக்கிறார் ‘தல’.. அதற்கு மிகப்பெரிய இரும்பு கேட்.. அதில் சின்ன சதுரத்தில் ஒரு திறப்பு..

எதற்கு இவ்வளவு டீடெய்ல் என்கிறீர்களா..? விஷயம் இருக்கு.. உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் பேசப்பட்ட ஒரு செய்தியைத்தான் இங்கே அப்படியே தருகிறோம்.. இப்படிப்பட்ட அஜித் வீட்டிற்கு கடந்த ஜன-1ஆம் தேதி புத்தாண்டு வாழ்த்து சொல்ல கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என சில வி.ஐ.பிகள் வந்தார்களாம்.. ஆனால் கதவு திறக்கப்படவில்லை.. ‘தல’ தரிசனமும் கிடைக்கவில்லையாம்.

கேட்டில் இருந்த சதுர திறப்பின் வழியாக தலைகாட்டிய செக்யூரிட்டி, அவரவர் கொண்டு வந்த பொக்கேவில் அவரவர் பெயரை மட்டும் எழுதிக்கொடுக்க சொல்லி, அதை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி விட்டாராம். முக்கியமாக இயக்குனர் சிவாவுக்கும் இதே அனுபவம் தான் கிடைத்ததாக, ஒரு தகவல் இப்போது வெளியே கசிந்துள்ளது.

அஜித்தை வைத்து வீரம், கடந்த வருடத்தின் நம்பர் ஒன் வசூல் என்று சொல்லப்படுகிற ‘வேதாளம்’ ஆகிய படங்களை இயக்கிய மற்றும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிற இயக்குனர் சிவாவும் அன்றைய தினம் ‘தல’யை பார்த்து புத்தாண்டு வாழ்த்துச்சொல்ல வந்தாராம்.. ஆனால் அவரும் வேறு வழியில்லாமல் கொண்டுவந்த பொக்கேவில் பெயரை எழுதிக்கொடுத்து விட்டுத்தான் போனாராம்..

இந்த இடத்தில் நீங்கள் கேட்கலாம், அஜித்துக்கு ப்ரண்ட்லியான இயக்குனர்.. இவர் ஒரு போன் பண்ணிட்டுகூடவா வரமாட்டார் என்று.. புத்தாண்டு வாழ்த்துக்களை போனில் சொல்லவேண்டாமே, நேரில் போய் சொன்னால் தானே மரியாதை என்பதால் சொல்லாமல் நேரில் கிளம்பி வந்தாராம் சிவா.. அஜித் வீட்டு செக்யூரிட்டி, இயக்குனர் சிவாவை ஓரிருமுறை பார்த்திருந்தாலும் கேட்டின் சதுர திறப்பு வழியாக பார்த்ததில் அடையாளம் தெரியாமல் போய்விட்டதாம். சிவா எடுத்துச்சொல்லியும் கூட கதவை திறக்கவில்லையாம்.

இதை உதவி இயக்குனர் ஒருவர், தனது நண்பர்கள் குழாமிடம் சொல்லப்போக, அப்போது அங்கே இருந்த இன்னும் சில உதவி இயக்குனர்களும் தாங்கள் பணியாற்றும் முன்னணி இயக்குனர்கள் பலர் அஜித்துக்கு கதைசொல்லப்போகிறேன் என கிளம்பி போய் இப்படி காம்பவுண்ட் கேட்டை பார்த்துவிட்டு திரும்பி வந்ததை கதைகதையாய் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம்.

படம் பண்ணி ஓரளவு ஹிட் கொடுத்த சில இயக்குனர்களே இப்படி மானம் கெட்டுப்போய் ‘தல’க்கு கதை சொல்றேன் என அலையும்போது, புதிய இயக்குனர்களின் ஆர்வக்கோளாறை பற்றி கேட்கவா வேண்டும் என்றும் அங்கே பேசிக்கொண்டார்கள்..